திங்கள், 29 ஜூன், 2009

கவிதைகள்

சனநாயகம்

சனநாயகம் என்னும் மேடையிலே
சாதி என்னும் கொடியை நட்டாதே
சமத்துவம் என்னும் கொடியை நடு
-வெ.ராஜேஷ் கண்ணன்

சனி, 27 ஜூன், 2009

கடல்கடந்த தமிழீழ அரசை வரவேற்கும் இனவெறிக்கு எதிரான சுவிஸ் அமைப்பு
கடல்கடந்த தமிழீழ அரசு அமைக்கப்படுவதை வரவேற்றுள்ள சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த இனவெறிக்கு எதிரான அமைப்பு இந்த நன்முயற்சிக்கு சர்வதேச சிவில் சமூகம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் மேற்படி அமைப்பின் செயலாளர் நாயகம் திரு. கார்ல் குறுண்பேர்க் விடுத்துள்ள அறிக்கையின் தமிழாக்கம் பின்வருமாறு:
கடல்கடந்த தமிழீழ அரசைத் தாபிப்பதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டமையை இனவெறிக்கு எதிரான அமைப்பு வரவேற்கிறது
பல வாரங்களாக நடைபெற்று வந்த மனிதப் படுகொலைகளின் பின்னர், சிறி லங்கா அரசும் இராணுவமும் இணைந்து மே 17 ஆம் திகதியன்று எதிர்த்தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி இடமான வன்னியில் எதிர்ப்பை நசுக்கியுள்ளன. சர்வதேச சமூகம் பரிதாபகரமான முறையில் அந்த அவலத்துக்கு உதவியுள்ளது அன்றில் அதைத் தடுப்பதற்குத் தவறிவிட்டது.
இந்தத் தாக்குதலில் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது சகாக்கள், சாதாரண குடிமக்களான பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், நோயளிகள், காயமடைந்தவர்கள் என ஆயிரக் கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த 300,000 குடிமக்கள் வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, சிறி லங்காவில் உள்ள தமிழ்ச் சிறுபான்மையினருக்கு சட்ட அந்தஸ்து வழங்க மறுத்து வருகின்றமை போன்றவை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் சிறி லங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிரான போரையே நடத்தி வந்திருப்பதைக் காட்டுகிறது.
சுதந்திரம் அடைந்த நாள் முதலான 61 வருட கால அனுபவம் ஒரு கசப்பான யதார்த்தமாக உள்ளது. பல வருடங்களாக தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இனவாத அடக்குமுறைகளும், 1983 இல் நடைபெற்ற பயங்கரமான இனப்படுகொலையுமே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணாமம் பெற்றமைக்கு காரணமாகும்.
இந்த வன்முறைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய நூறாயிரக் கணக்கான தமிழர்கள் உலகம் முழுவதிலும் அகதிகளாகத் தஞ்சம் அடைந்ததுடன், புலம்பெயர் அமைப்புக்களை உருவாக்கி தங்கள் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் சட்பூர்வ பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப் பட்டதை அடுத்து, சிறி லங்காவில் வாழ்ந்த தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் மிக மோசமான சூழலை எதிர் கொண்டுள்ளார்கள். ராஜபக்ச அரசு போராட்ட இயக்கத்துக்கு மறுத்த எதனையுமே தமிழ் மக்களுக்குத் தருவதற்குத் தயாராக இல்லை.
சிறி லங்கா இராணுவத்தின் குற்றங்களுக்கு சாட்சியாகவும், எறிகணை வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் முன்னின்று உழைத்த 3 தமிழ் மருத்துவர்களை அவருடைய அரசு கொழும்பில் சிறை வைத்திருக்கிறது.
நாடு கடத்தல், அடக்குமுறை, காணாமற் போதல், சரியாகச் சொல்வதானால் இனச் சுத்திகரிப்பு, ஆகிய கொடுமைகளிலிருந்து தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஒடுக்குமுறை, பாரபட்சம் என்பன இல்லாமல் தமிழ் மக்களின் உரிமைகள், அவர்களுடைய சுயநிர்ணய உரிமை, அடிப்படை மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் யாவையும் தமிழ் மக்களுக்கு சிறி லங்காவிலும் வெளிநாடுகளிலும் உறுதிப் படுத்தப்பட வேண்டும்.
இத்தகைய அடிப்படையில் கடல்கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளமையை இனவெறிக்கு எதிரான அமைப்பு வரவேற்கிறது
சுவிஸ் நாட்டு அரசுசாரா அமைப்பான இனவெறிக்கு எதிரான அமைப்பு சகல விதமான இனப் பாகுபாடுகளுக்கும் எதிராகப் போராடுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். சிறி லங்காவில் தங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரம் காரணமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் நாட்டை விட்டு வெளியேறி ஏனைய நாடுகளில் அடைக்கலம் புகுந்ததைப் போலவே சுவிற்சர்லாந்திலும் தமிழ் மக்கள் அடைக்கலம் புகுந்தார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஏன் என்றுமே காலனித்துவ நாடாக விளங்கியிராத சுவிற்சர்லாந்து நாட்டில் கூட காலனித்துவ காலங்களில் உருவாகிய இனவெறி நிலவுகிறது. இந்நிலையில், தங்கள் நாட்டில் இனவெறிக்குத் தப்பி இங்கு வந்த மக்கள் இங்கும் இனவெறிக்கு ஆளாகிறார்கள்.
இந்நிலையில், தமிழ் மக்கள் எழுதவிருக்கும் புதிய அத்தியாயாத்துக்கு ஆதரவாக இனவெறிக்கு எதிரான அமைப்பு விடுத்துள்ள அழைப்புக்கு சர்வதேச சிவில் சமூகம் நேசக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கிறோம்.
கார்ல் குறுண்பேர்க்செயலாளர் நாயகம்இனவெறிக்கு எதிரான அமைப்பு

வெள்ளி, 26 ஜூன், 2009



Thursday, June 4, 2009 0
''ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948லேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்-பட்டபோது, `இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது' என்று நேரு ஒதுங்கிக் கொண்டார். ஸ்ரீமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.ஈழத் தமிழர்களுக்காக இந்திராகாந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ்காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திராகாந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ்காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனேவுடன் உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.போனவையெல்லாம் போகட்டும். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக ஒழிப்பது என ராஜபக்ஷே அரசு தன் ராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன்சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?விடுதலைப்புலிகளுக்காகவோ, பிரபாகரனுக் காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு சர்வதேச போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத்தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ஷே முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன்சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. ராஜபக்ஷேவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது. பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங் அந்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன்சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார். புதிதாக அயல்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஆஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது.ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப்பகுதியே மயானம் ஆகிவிட்டது. எங்கும் தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம்.ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் `பான் கீ மூன்' நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வர வேண்டுமென்று பிரிட்டனும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ஷே அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியாகாந்திக்கும், மன்மோகன்சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும். ஆனால் எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகிறது.பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று ஆவேசமாய்ச் சொல்கிறார் தமிழருவி மணியன்..

இந்தியாவின் கவனம் முழுவதும் மேற்கு எல்லையிலும், காஷ்மீர் பகுதியிலும்தான் இருக்கும். கிழக்குப் பாகிஸ்தானில் அது தாக்குதல் நடத்தாது என்று பாகிஸ்தான் சர்வாதிகாரி யாகியாகான் நினைத்திருந்தார். அது தப்புக்கணக்காகியது. கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள டாக்கா விமான தளத்தில் 20 போர் விமானங்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்திருந்தது. இந்திய விமானங்கள் குண்டு வீசி, இந்த 20 விமானங்களையும் அழித்தன. விக்ரந்த் என்ற இந்தியப் போர்க் கப்பலைத் தகர்ப்பதற்காக, கராச்சியில் இருந்து புறப்பட்டு வந்த காஜி என்ற பெயருடைய பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலை (2,500 டன் எடையுள்ளது) இந்திய கப்பல் படை கண்டுபிடித்து அழித்தது.

பாகிஸ்தான் கப்பல்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு வரமுடியாதபடி முற்றுகையிடப்பட்டன. இந்த சமயத்தில் பாகிஸ்தான் சர்வாதி கார ஆட்சிக்கு எதிராக கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். முஜிபுர் ரகிமானின் ஆதரவாளர்கள் முக்திவாகினி என்ற படையை அமைத்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டனர். கிழக்குப் பாகிஸ்தான் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதென்று இந்தியா முடிவு செய்தது. இந்திய ராணுவ வீரர்கள் விமானங்களில் சென்று, கிழக்குப் பாகிஸ்தான் தலைநகரான டாக்காவைச் சுற்றிலும் பாரசூட் மூலம் குதித்தனர். இந்திய ராணுவத்தினரும், முக்திவாகினி படையினரும் டாக்காவைச் சுற்றி முற்றுகையிட்டனர்.

பாக்.ராணுவம் சரணாகதி தளபதி நியாஜி தலைமையில் டாக்காவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் இருந்தனர். இந்திய வீரர்களுடன் போரிட்டால் பாகிஸ்தான் படைகள் அடியோடு அழிவது நிச்சயம் என்பதை நியாஜி புரிந்து கொண்டார். டிசம்பர் 16_ந்தேதி மாலை 4.31 மணிக்கு இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தார். அதே சமயம் மேற்கு முனையிலும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அடிமேல் அடி கிடைத்தது. இன்னும் சில மணி நேரத்தில் லாகூரை இந்திய ராணுவம் கைப்பற்றிவிடும் நிலைமை ஏற்பட்டது. அதனால் போர் நிறுத்தத்துக்கு யாகியா கான் சம்மதித்தார். டிசம்பர் 17_ந்தேதி மேற்கு முனையிலும் போர் ஓய்ந்தது.

1971_ல் இரண்டு வாரங்கள் நடந்த இந்தியா _பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி பிரதமர் இந்திரா காந்தியின் புகழையும், மதிப்பையும் உலக அரங்கில் உயர்த்தியது. அவருடைய ராஜ தந்திரத்தால் கிழக்குப் பாகிஸ்தான் விடுவிக்கப்பட்டு வங்காள தேசம் என்ற பெயரில் சுதந்திர நாடாகியது. வங்காளதேசம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதும் பாகிஸ்தான் சிறையில் இருந்த முஜிபுர் ரகிமான் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் வங்காளதேசத்துக்கு செல்லும் வழியில் டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் இந்திரா காந்தியும், மற்ற மந்திரிகளும் அவரை வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் முஜிபுர் ரகிமான் பேசுகையில் வங்காள தேசத்துக்கு சுதந்திரம் கிடைக்க இந்திரா காந்தி செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தார்.

"இந்திரா காந்தி, இந்திய தேசத்துக்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே தலைவி" என்று புகழாரம் சூட்டினார். இந்திரா காந்தி பேசுகையில் "ரகிமானின் உடலைத்தான் பாகிஸ்தானில் சிறை வைத்தார்கள். அவருடைய ஆன்மாவை சிறை வைக்க முடியவில்லை. அதனால்தான் வங்காளதேச மக்கள் எழுச்சியுடன் போராடி, தங்கள் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றனர்" என்று குறிப்பிட்டார்.

ரகிமான் வங்காளதேசம் சென்று அந்த நாட்டின் அதிபரானார். பாகிஸ்தான் பிரதமராக பூட்டோ பதவி ஏற்றார். போரில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதங்கள் ஏராளம். கிழக்கு பாகிஸ்தானை (வங்காளதேசத்தை) பறிகொடுத்ததுடன் காஷ்மீரில் 374 சதுர மைல் பிரதேசத்தையும், பஞ்சாபில் 374 சதுர மைலையும் சிந்து _ கட்ச் பகுதியில் 4,745 சதுர மைல் பிரதேசத்தையும் அது இழந்திருந்தது. அத்துடன் 246 டாங்கிகள், 94 விமானங்கள், 2 போர்க்கப்பல்கள், 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றையும் அது இழந்தது. உயிர்ச்சேதம் பற்றிய விவரத்தை பாகிஸ்தான் அறிவிக்கவில்லை.

எனினும் இந்தியாவுக்கு ஏற்பட்ட சேதத்தைவிட பல மடங்கு அதிகம் என்று கருதப்படுகிறது. இந்தியா 73 டாங்கிகளையும், 45 விமானங்களையும் இழந்தது. 3,238 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். 617 பேர் போர்க் கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்டனர். பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவும் 1972 ஜுன் மாத இறுதியில் சிம்லாவில் சந்தித்துப் பேசினார்கள். 5 நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. இந்தியா _ பாகிஸ்தான் பிரச்சினைகளை இரு நாடுகளும் சமாதான முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சிம்லா ஒப்பந்தம் ஜுலை 2_ந்தேதி கையெழுத்தாகியது. ஒப்பந்தத்தில் இந்திராவும், பூட்டோவும் கையெழுத்திட்டனர்.