திங்கள், 27 அக்டோபர், 2014

காசாவில் 469 குழந்தைகள் படுகொலை ~ யுனிசெப் தகவல்

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் பயங்கரத்தாக்குதலில் இதுவரை 469 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 18 வயதுக்கு கீழ் உள்ள சுமார் 10 லட்சம்குழந்தைகள் ஆதரவற்று இருப்பதாகவும் ஐ.நாவின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் போருக்கு முடிவுஏற்படாத நிலையில், குழந்தைகளின்பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது மிகவும் கவலைஅளிப்பதாக உள்ளது. 10 லட்சம் குழந்தைகள் போர்ச் சூழலில் குடும்பங்களை இழந்து ஆதரவின்றி உள்ளனர். நாங்கள்அவர்களிடன் பேசும்போது, அவர்கள் உளவியல் ரீதியாக மிக பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரிகிறது.குடும்பத்தினர் சிலரை இழந்த குழந்தைகள், தங்களது மற்ற உறவுகளுடன் பேசக்கூட மறுக்கின்றனர். தொடர்ந்து கொடூர கனவுகள், படுக்கையில் சிறுநீர் கழித்தல் என பல்வேறு வகையில் அவர்களது பயத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று காஸாவில் மனித உரிமை உதவிகளை மேற்கொண்டு வரும் ஐ. நா அதிகாரி யுனிசெப் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு சம்பந்தமாக எந்த ஒப்பந்தமும் கிடையாது என்று பதில் அளித்திருந்தது.

கச்சத்தீவு ஒப்பந்தம் எதுவும் இல்லை. அது வெறும் கடல் எல்லை ஒப்பந்தம்தான். ஆனால் கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்ப்பதுதான் இந்திய அரசின் நோக்கமாக இருந்தது என்று நாம் தமிழர் கட்சியின் க.அய்யநாதன் கூறினார்.
மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு சம்பந்தமாக எந்த ஒப்பந்தமும் கிடையாது என்று பதில் அளித்திருந்தது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித்தொடர்பாளர் கா.அய்யநாதன் வெப்துனியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-
சரியாக சொல்ல வேண்டுமானால், போடப்பட்ட ஒப்பந்தம் 'கச்சத்தீவு ஒப்பந்தம்' அல்ல. கடல் எல்லைகளைப் பிரிக்கும் ஒப்பந்தம்தான். ஆனால் இந்தியாவின் நோக்கம் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுப்பதுதான்.
இந்த ஒப்பந்தத்தின் பெயர் இந்திய-இலங்கை கடல் எல்லை வரைவு ஒப்பந்தம் (International Maritime Boundary line aggrement).
கடல் எல்லைகளை எப்படி பிரிப்பார்கள் என்று சொன்னால், Equidistant - The Median என்று சொல்லுவார்கள். இரு நாடுகளின் கரையிலிருந்து சமதூரத்தில் 4 அல்லது 5 இடங்களில் புள்ளிகள் வைத்து அந்த புள்ளிகளை இணைத்து இரு நாடுகளுக்கிடையே உள்ள எல்லைக்கோட்டை வகுத்ததாகவும், அப்படி பிரிக்கும்போது கச்சத்தீவு இலங்கை பக்கம் போய்விட்டதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால் அவ்வாறு பிரிக்கும்போது ஒரு புள்ளி வேண்டுமென்றே இந்தியாவை நோக்கி இழுத்து வைத்துள்ளனர். அப்படி இழுத்து வைத்ததன் காரணமாக கச்சத்தீவு இலங்கையின் பக்கம் சென்றுவிடுகின்றது. இதை பேராசிரியர் சூரிய நாராயணன் வெளிக்கொண்டு வருகிறார்.
இந்திய ஆவணக் காப்பகத்தினுடைய இயக்குனராக இருந்த ஜபோட்டா என்பவர் கூறியதாக சில தகவல்களை ஒரு கட்டுரையில் பேராசிரியர் சூரிய நாராயணன் இவ்வாறு எழுதுகிறார்:
"அதாவது கச்சத்தீவு இலங்கைக்குப் போக வேண்டும் என்பதற்காக ஒரு புள்ளி இந்தியாவை நோக்கி இழுத்து வைக்கப்பட்டது. அவர்கள் நேர்மையாக புள்ளி வைத்திருந்தார்கள் என்று சொன்னால், இந்தியாவுக்கு கிழக்குப்பக்கம், கச்சத்தீவுக்கு 3 மைல் அப்பாலே இந்திய-இலங்கை கடல் எல்லை அமைந்திருக்கும். எனவே கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புள்ளியை இழுத்து வைத்தார்கள் என்று இந்திய ஆவணக் காப்பகத்தினுடைய இயக்குனராக இருந்த ஜபோட்டா கூறியதாக பேராசிரியர் சூரிய நாராயணன் எழுதுகிறார்.
இந்த கட்டுரையை எழுதிய சூரிய நாராயணன் மீது எந்த வழக்கும் கிடையாது. இதை பல விவாதங்களில், பல காலமாக பேசிவரும் என் மீதும் இதுவரை எந்த வழக்கும் கிடையாது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கும்போது இது இந்தியாவுக்கு சொந்தமானது இல்லை என்று மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இது தமிழ்நாட்டுக்கு சொந்தமாது. சேது ஜமீனுக்கு சொந்தமாது என்று ஒப்புக் கொண்டிருப்பார்களேயானால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றிதான் அதை கொடுக்க முடியும். ஆக அவர்கள் என்ன செய்தார்கள் என்று சொன்னால் இது இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ சொந்தமாது இல்லை. இது ஒரு தகராறுக்குட்பட்ட பகுதி. எனவே எல்லைகளைப் பிரிக்கும்போது கச்சத்தீவு அவர்களிடம் சென்றுவிட்டது. எனவே இது ஒரு Settled issue என்று இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பார்க்கிறார்கள்.
இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது தமிழ்நாட்டினுடைய சொத்தான கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதற்காக திட்டமிட்ட சதி தான் இந்த எல்லைக்கோடு ஒப்பந்தம். இப்போது இவர்கள் சொல்வது என்னவென்றால், ஐநாவினுடைய நிர்பந்தத்தின் பேரில்தான் நாங்கள் இந்த எல்லைக்கோடு ஒப்பந்தத்தை வகுத்தோம் என்கிறார்கள். ஆனால் கச்சத்தீவைக் கொடுக்கும்போது நாடாளுமன்றத்தில் அப்போதைய அமைச்சர் ஸ்வரன் சிங் அப்படி ஒரு வார்த்தையை சொல்லவே இல்லை. நாங்கள் எல்லைக்கோடுதான் போட்டுக் கொண்டோம் அதில் கச்சத்தீவு இலங்கைக்கு போய்விட்டது என்றுதான் சொன்னார்.
இதில் பாரம்பரியமாக கடலில் பயணம் செய்யும் உரிமை, பாரம்பரியமாக கடலில் மீ்ன் பிடிக்கும் உண்டா என்று கேட்டால் இல்லை என்று சொல்லுகிறார். அந்தப் பகுதியில் வணிக ரீதியிலா கப்பல்கள் எப்போதும் போல போகலாம். ஆனால் மீனவர்கள் மட்டும் போகக் கூடாது என்றார் ஸ்வரன் சிங்.
ஆக, இது தமிழ்நாட்டுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் அயோக்கியத்தனம் என்று காட்டமாகவே கூறினார் அய்யநாதன்.

சிங்களர்கள் தமிழ் கற்றுகொண்டு தமிழை இணைப்பு மொழியாக பயன்படுத்த கூடாதா..?

‘தமிழ் மக்கள் சிங்களம் கற்க வேண்டும்’ இந்தியத் துணைத்தூதுவரின் கருத்துக்கு விளக்கம் கோரப்படும்:
வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் எஸ்.டி.மூர்த்தி வெளியிட்ட கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதகரத்தில் அண்மையில் இடம்பெற்ற ஹிந்தி மொழி தொடர்பிலான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய துணைத் தூதுவர், “இந்தியாவில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள், ஹிந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக்கொண்டுள்ளனர். அதுபோல, வடக்கிலுள்ள தமிழ் மக்களும் சிங்கள மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
குறித்த கருத்து தொடர்பில் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, “மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்சினை. அதில் தூதரக அதிகாரிகளின் தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இந்த பிரச்சினை பற்றி இன்னும் எங்களுக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் துணைத் தூதர் எந்தக் கண்ணோட்டத்தில் அத்தகைய கருத்தை வெளியிட்டார் என்பது பற்றி விளக்கம் கேட்கப்படும்” என்றுள்ளார்


நாங்கள் நாய்களைவிட கேவலமானவர்களா ??
அசாமில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக போராடிய
லக்ஷ்மி ஓரான் என்கிறபெண்ணை அம்மணமாக்கி
அடித்து உதைத்துவிரட்டி அடித்தனர் சாதி வெறி பிடித்தவர்கள்..
“சாதி வெறியர்களால் அம்மணமாக்கி அவமானம் படுத்தப்பட்டு வீதி வீதியாக அடித்து விரட்டப்பட்டு மேல் சாதி வெறியர்கள் ஒருவர் விடாமல் உதைத்து சாதி வெறிக்கு இரையான லக்ஷ்மி ஓரான் சொன்னது இது தான் …
“நான் மிகுந்த அவமானத்தில் இருக்கிறேன் இந்த அவமானத்தை என்னால் என் வாழ்கையின் எந்த காலகட்டத்திலும் மறக்கவே முடியாது …ஆதிவாசிகள் உரிமைகளை கேட்பது தவறா .. ?? மனிதர்களாக மதிக்கப்படவேண்டும் என்று விரும்பியது தவறா .. ??
வீதியில் நாய்கள் நுழைந்தால் கூட ஒன்றும் செய்யாத மேல் சாதியினர் நாங்கள் நடந்ததும் எங்களை கேவலமாக அடித்து விரட்டுவது ஏன் ?? நாங்கள் நாய்களைவிட கேவலமானவர்களா ??”
“நான் தற்கொலை செய்துகொள்ள யோசிக்காத இரவே இல்லை… ஆனால் என்னை நம்பித்தான் என் குடும்பம் இருக்கிறது.. அந்த குடும்பம் எப்போதும் போல வறுமையில் தான் இருக்கிறது … அதை காப்பாற்றத்தான் நான் அவமானத்தை மறந்து வருமானத்திற்க்காக இன்று செக்யுரிட்டி வேலை பார்கிறேன் ..!!”